நான் இந்திரா காந்தியின் பேத்தி.. என்னை பயமுறுத்த நினைக்காதீங்க..! கெத்து காட்டும் பிரியங்கா காந்தி

By karthikeyan VFirst Published Jun 26, 2020, 7:23 PM IST
Highlights

பிரியங்கா காந்தி, தன்னை மிரட்ட முயற்சிக்க வேண்டாம் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச பாஜக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 
 

பிரியங்கா காந்தி, தன்னை மிரட்ட முயற்சிக்க வேண்டாம் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச பாஜக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சோனியா காந்தி, உத்தர பிரதேச பொறுப்பாளராகவும் இருக்கிறார். அதனால் அவர் தேசிய அரசியலை விட, உத்தர பிரதேசத்தில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். 

உத்தர பிரதேச யோகி அரசின் கொரோனா தடுப்பு பணிகளை தொடர்ந்து விமர்சித்துவருகிறார் பிரியங்கா காந்தி. ஊரடங்கின்போது, வெளிமாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை  மீண்டும் சொந்த ஊர்களுக்கு திருப்பியழைத்து கொண்டுவரும் விவகாரத்தில் உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதற்கிடையே, கான்பூரில் அரசு சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக வெளியான ஊடக தகவலை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த ஃபேஸ்புக் பதிவிற்காக  பிரியங்கா காந்திக்கு உத்தர பிரதேச யோகி பாஜக அரசு, நோட்டீஸ் அனுப்பியது. 

அந்த நோட்டீஸூக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள பிரியங்கா காந்தி, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க நினைக்கிறார்களோ எடுக்கட்டும். மக்களின் பிரதிநிதியாக நான் தொடர்ந்து உண்மைகளை பேசிக்கொண்டே இருப்பேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி; பாஜகவில் உள்ளதைப்போல அறிவிக்கப்படாத செய்தித்தொடர்பாளர் கிடையாது.

மக்களுக்கு உண்மைகளை எடுத்துச்சொல்வதை தொடர்வேன். உத்தர பிரதேச அரசு பல துறைகளின் மூலம் என்னை மிரட்டிப்பார்க்க நினைக்கிறது. அதற்கெல்லாம் அசரமாட்டேன் என்று பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார். 
 

click me!