இடி-மின்னல் தாக்கி 107 பேர் பலி... பீகார், அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 26, 2020, 9:53 AM IST
Highlights

பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இடி மின்னல் தாக்கியதில் 107 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 401 பேர் பலியாகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி 107 பேர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மற்றும் உபி மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு திடீரென கண்ணை பறிக்கும் மின்னல் மற்றும் காதை பிளக்கும் இடியால் பீகாரில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் உபி மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருசிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பீகாரில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

click me!