Private Bus strike : டிச.21 முதல் ஸ்டிரைக்… தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு!!

Published : Dec 10, 2021, 06:39 PM IST
Private Bus strike : டிச.21 முதல் ஸ்டிரைக்… தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு!!

சுருக்கம்

வாகன வரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்து உள்ளது. 

வாகன வரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ( Private Bus strike ) தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்து உள்ளது. கேரள மாநிலத்தில் மாணவர்களுக்கான பேருந்து கட்டண விகிதம் மற்றும் வாகன வரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து மாநில போக்குவரத்து துறை அமைச்சருடன் கோட்டயத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், 10 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து மீண்டும் வருகிற 21 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக பேசிய தனியார் பஸ் உரிமையாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாநில அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். எனவே வருகிற 21 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா நெருக்கடியால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டனர். இதை அடுத்து வரும் 21 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்து உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Bank Holiday : செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறப்பு! செப்.28 முதல் 3 நாள் என்ன நடக்கும்?
8th Pay Commission: Minimum Pay ரூ.69,000.! HRA 40%.! அக்டோபர் 7, 8ல் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகுமா?