அரங்கம் மற்றும் கண்காட்சி வாயில்களில் பாதுகாப்பு பணிகளுக்காக தனியார் நிறுவனங்களை சேர்ந்த கருப்பு உடை அணிந்த பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு தமிழக காவல் துறையை நிறுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா நடைபெறுகிறது. இதில் 450 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 100 பெண் தொழில் முனைவோர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதிவு செய்து அனுமதி பெற்ற நபர்கள் கழுத்தில் டேக் அணிந்து இருந்தால் மட்டுமே விழா அரங்கு மற்றும் கண்காட்சி அரங்குகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் அமிர்த சரோவர் திட்ட இலக்கை எட்டவில்லை: மத்திய அரசு தகவல்
அரங்கம் மற்றும் கண்காட்சி வாயில்களில் பாதுகாப்பு பணிகளுக்காக தனியார் நிறுவனங்களை சேர்ந்த பவுன்சர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். கருப்பு உடையில் நின்றிருந்த பவுன்சர்கள் டேக் அணியாமல் வந்த நபர்களை அனுமதிக்க மறுத்து வெளியேற்றினர்.
அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை காட்டிவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் பவுன்சர்கள் நிர்பந்தம் செய்தனர். இதனால் நிகழ்ச்சிக்கு தொழில் கனவுகளுடன் வந்தவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஒரு சிலர் கருப்பு உடை அணிந்த பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாவில், தமிழக காவல்துறையினரை பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தாமல், தனியார் நிறுவன பவுன்சர்களை ஈடுபடுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "2300 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்து இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகி 6800 ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக உயர்ந்திருக்கிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டார்.
திமுகவின் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நாளைக்கு நடக்காதாம்! மாற்று தேதிக்கு ஒத்திவைப்பு!