ஜம்முனு பட்டுவேட்டி கட்டி வந்து குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

Published : Jan 17, 2024, 09:58 AM ISTUpdated : Jan 17, 2024, 10:15 AM IST
ஜம்முனு பட்டுவேட்டி கட்டி வந்து குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

சுருக்கம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில்  கட்டுமானம் பணி நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.

கேரளா வந்துள்ள பிரதமர் மோடி பட்டுவேட்டி கட்டி வந்து குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி  தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில்  கட்டுமானம் பணி நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருக்கப்பபோவதாக கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். 

இதையும் படிங்க;- பிரதமர் மோடி முதல் சூப்பர்ஸ்டார்ஸ் வரை... சுரேஷ் கோபி மகள் திருமணத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். நேற்று ஆந்திரா சென்ற பிரதமர் மோடி லேபாக்‌ஷியில் உள்ள வீரபத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீ ராம் ஜெய் ராம் பஜனை பாடினார். 

பின்னர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் கொச்சி நெடும்பாசேரி வந்த பிரதமர் மோடியை முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் உள்ளிட்டோர் வரவேற்றனர். கேபிசிசி சந்திப்பில் இருந்து நேற்று இரவு அவர் தங்கும் எர்ணாகுளம் விருந்தினர் மாளிகை வரை பேரணியாகச் சென்றார்.  பாஜக தொண்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கனோர் இருபுறமும் திரண்டு நின்று மலர்கள் மற்றும் கட்சிக் கொடிகளுடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இன்று பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கு நடக்கும் பாஜக முன்னாள் எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!