
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை (ஜன. 16) மாலை 6.50 மணியளவில் எர்ணாகுளத்தில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில் தரையிறங்கி, ஹெலிகாப்டர் மூலம் கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரிக்குச் சென்றார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
கேபிசிசி சந்திப்பில் இருந்து இன்று இரவு அவர் தங்கும் எர்ணாகுளம் விருந்தினர் மாளிகை வரை பேரணியாகச் சென்றார். தீவிர பாஜக ஆதரவாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இருபுறமும் திரண்டு நின்று மலர்கள் மற்றும் கட்சிக் கொடிகளுடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
திறந்த வாகனத்தில் பயணித்த பிரதமர் மோடியுடன் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனும் இருந்தார். பிரதமர் மோடி சாலையில் இருபுறமும் கூடியிருந்த மக்களை நோக்கி கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ம.பி. குனோ தேசியப் பூங்காவில் 10வது சிறுத்தை மரணம்!
மத்திய அமைச்சர் வி.முரளீதரன், பிரகாஷ் ஜவடேகர் எம்.பி., தலைமைச் செயலாளர் டாக்டர். வி.வேணு, மாநில காவல்துறை தலைவர் ஷேக் தர்வேஷ் சாஹிப், மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.கே. உமேஷ், எர்ணாகுளம் ரூரல் மாவட்ட காவல்துறை தலைவர் வைபவ் சக்சேனா உள்ளிட்ட பலரும் நெடும்பசேரிக்கு பிரதமரை வரவேற்க வந்திருந்தனர்.
நாளை (புதன்கிழமை), குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷின் திருமணத்தில் கலந்துகொள்கிறார். காலை 9.45 மணிக்கு திரிபிராயர் கோயிலுக்கும் செல்கிறார். மதியம், வெலிங்டன் தீவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஜன. 22ஆம் தேதி மம்தா பானர்ஜி தலைமையில் மத நல்லிணக்கப் பேரணி!