இந்திய பிரதமர் மோடி இன்று வாரணாசியில் உள்ள அடல் அவாசியா பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர்களோடு பேசி மகிழ்ந்தார். மேலும் அந்த காணொளியை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார்.
குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த பிரதமர் மோடி, இந்தக் குழந்தைகளிடம் நம்பிக்கை, உற்சாகம், உறுதிப்பாடு மற்றும் அதிக ஆற்றலைப் பார்க்கிறேன் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தனது நாடாளுமன்றத் தொகுதியான பனாரஸ் சென்றடைந்தார்.
அங்கு கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்ததோடு, பல்வேறு திட்டங்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தனது பயணத்தின் ஒரு பகுதியாக பனாரஸில் உள்ள அடல் ரெசிடென்ஷியல் பள்ளி குழந்தைகளையும் பிரதமர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். குழந்தைகளுடன் உரையாடும் போது, அவர்களின் மனதில் தோன்றிய கேள்விகளுக்கும் பிரதமர் மோடி தொடர்ந்து பதிலளித்தார்.
மாறி மாறி குறைகூறும் இந்தியா - கனடா! அமெரிக்காவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்?
அந்த பள்ளியின் குழந்தைகளும் பிரதமர் மோடியிடம் பல கேள்விகளைக் கேட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் குழந்தைகளுடன் உரையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இந்தக் குழந்தைகளிடம் நம்பிக்கை, உற்சாகம், உறுதிப்பாடு மற்றும் அதிக ஆற்றலைப் பார்க்கிறேன் என்று கூறினார்.
அடல் அவாசியா பள்ளி என்றால் என்ன?
உ.பி.யில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் அடல் குடியிருப்புப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சுமார் 1115 கோடி ரூபாய் செலவில் 16 அடல் குடியிருப்புப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் குறிப்பாக தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அடல் அவாசியா வித்யாலயாவின் இளம் மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். pic.twitter.com/Fi0S2X4j7I
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த பள்ளிகளின் நோக்கம் தரமான கல்வியை வழங்குவதும், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதும் ஆகும். ஒவ்வொரு பள்ளியும் 10-15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வகுப்பறைகள் தவிர, இந்த பள்ளிகளில் விளையாட்டு மைதானம், பொழுதுபோக்கு பகுதிகள், ஒரு மினி ஆடிட்டோரியம், விடுதி வளாகம், மெஸ் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பள்ளிகள் ஒவ்வொன்றும் தோராயமாக 1000 மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கும்.
9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை துவங்கி வைக்கும் பிரதமர் மோடி - எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?