டெல்லி யமுனா விஹார் பகுதியில் 4 பள்ளி ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவனின் தாய், அந்த நான்கு ஆசிரியர்கள் மீது அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
"கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, தனது மகன் யமுனா விஹாரில் உள்ள டெல்லி அரசுப் பள்ளிக்கு வழக்கம் போல் சென்றிருந்தான் என்றும், அப்போது தன் மகன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்ததற்கு பள்ளி ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்" என்று பாதிக்கப்பட்டவரின் தாய் கவிதா போலீசில் அளித்த புகாரில் தெரிவித்தார்.
ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்ட போதிலும், தன் மகன் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்த பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். "மேலும் அதே மாணவனை நான்காவது பீரியட் முடிந்ததும், அதே ஆசிரியர் அந்த மாணவனை வரவழைத்து, பள்ளியில் இருந்த மற்ற மூன்று ஆசிரியர்களுடன் இணைந்து கொடூரமாக உதைத்து, குத்தி முழங்கையால் அடித்தார்கள்," என்று அந்த பெண்ணின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகரில் 15 வயது சிறுமியை அம்மாவாக்கிய நபர் போக்சோவில் கைது
இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நான்கு ஆசிரியர்களும் சிறுவனை மிரட்டியுள்ளனர். சிறுவன் நடந்த சம்பவத்தை தன் தாயிடம் கூறி பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டார். அவரது தாயின் கூற்றுப்படி, சிறுவனுக்கு கடுமையான வலி மற்றும் மார்பில் வீக்கம் ஏற்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த 4 ஆசிரியர்கள் மீதும் FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.
சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவி மண்வெட்டியால் அடித்து கொலை; ராமநாதபுரத்தில் பரபரப்பு