காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மனைவி எலிசபெத் ஆண்டனி, பாஜகவில் தங்கள் மகன் அனில் ஆண்டனியின் திடீர் வளர்ச்சிக்கு காரணம் தெய்வத்தின் அருள் இருப்பதனால் தான் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள ஆலப்புழாவின் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கிரிஸ்துவர் தங்குமிடமான கிருபாசனம் மரியன் ஆலயத்தின் சமீபத்திய விழாவில் எலிசபெத் இந்த தகவலை முன்வைத்தார். இது அந்த கோவிலின் யூடியூப் சேனல் மூலம் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
பாஜக மீதான தனது வெறுப்பு தற்போது நீங்கிவிட்டதாக அவர் கூறினார். அந்த வீடியோவில், சமீபத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் ஆண்டனி இடம்பிடித்ததையும், பல்வேறு நோய்களில் இருந்து அவர் குணமடைந்ததையும், இயேசுவின் தாயான மேரியின் அருளால் அனில் பாஜகவில் சேர்ந்ததையும் எலிசபெத் நினைவுகூர்ந்தார். புனித மேரியின் ஆசீர்வாதத்தால் மகனின் பாஜக பிரவேசத்தை ஆண்டனி நிதானத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
undefined
கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கே அழைத்துக்கொள்ளுங்கள் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
மேலும் மேரியின் அருள் தான், தனக்கு பாஜக மீதிருந்த வெறுப்பை நீக்கியது என்றும் அவர் தெரிவித்தார். “என் மகன் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தபோதுதான், குடும்ப அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் சிந்தன் ஷிவிர் தீர்மானம் நிறைவேற்றினார்.
எனது கணவர் எங்களின் மகனை அரசியலில் ஈடுபடுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் அவருக்கு அரசியலில் வரவேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அதிகம் இருந்தது. நான் புனித மரியாவிடம் பிரார்த்தனை செய்தேன், என் மகனுக்கு 39 வயதாகிறது, அவருக்காக, கண்ணீருடன், மேரிக்கு முன்பாக அவனது கனவை நினைவாக்க வேண்டினேன்.
அப்போது தான் என் மகனை பாஜகவில் சேருமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவருக்கு பா.ஜ.,வில் வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்பட்டது. அப்போது தான் BJP மீதான என் வெறுப்பும் நீங்கியது. மேரி எனக்கு ஒரு புதிய இதயத்தைக் கொடுத்தார். மகன் பிஜேபியில் சேர்ந்த பிறகு தனது வீட்டில் உள்ள அமைதியை குலைக்கக்கூடாது என்று பிரதிக்க ஆரம்பித்தேன்.
என் மகன் பாஜகவில் இணைந்தது என் கணவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பா.ஜ.க.வில் சேர்ந்த அனில் வீட்டுக்கு வந்ததும் என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டேன். ஆனால் மேரியின் அருளால், என் கணவர் அதை நிதானமாக ஏற்றுக்கொண்டு எந்தவித கோபமும் அடையாமல் அவர் சென்றார். மாதாவின் அருள் தான் இவை அத்தனைக்கும் காரணம் என்று எலிசபெத் கூறினார்.