"இதற்காகத்தான் விவசாய சட்டத்தை ரத்து செய்தேன்" ; பிரதமர் சொன்ன காரணம் என்ன ?

By manimegalai aFirst Published Nov 20, 2021, 5:27 PM IST
Highlights

3 வேளாண் விவசாய சட்டங்களை இந்த காரணத்துக்காகத்தான் ரத்து செய்தேன் என்று காரணத்தை கூறி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.  

சுதந்திர இந்தியாவில் நீண்ட காலம் நடைபெற்ற போராட்டம் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் ஆகும். இந்தியாவில் மிகப்பெரிய போராட்டம் நடக்க காரணமாக இருந்த 3 வேளாண்சட்டங்களை அரசு திரும்பப்பெறுவதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அரசு மனம் திருந்தி வாபஸ் பெற்றதாக ஒப்புக்கொள்ள முடியாது என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இந்த 3 விவசாய சட்டங்கள் ரத்தினை அணைத்து கட்சிகளும் ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இன்று உத்திரபிரதேச மாநிலம் மாஹோபாவில் விவசாயிகளுக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான நலதிட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் அவ்விழாவில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தார் பிரதமர் மோடி. குடும்ப அரசியல் கட்சிகள் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள்  விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். மக்களின் பிரச்சனையில் அரசியல் செய்வது தேவையில்லாத ஒன்று. 

மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விவசாய பிரச்சனைகளை வைத்தே வருடக்கணக்கில் அரசியல் செய்து வருகின்றன.அதனை தீர்த்து வைக்கவே தான் ஆலோசித்து இந்த முடிவை எடுத்தேன். மேலும் முந்தைய ஆட்சிகளில் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. என்னுடைய இந்த ஆட்சியில் கொரோனா தொற்றிலும் கூட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தபட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்கள் வாபஸ் பெற்றதையும் அரசியல் செய்வார்கள் என்று தெரியும்.மக்கள் நலனே இந்த நாட்டுக்கு முக்கியம்’ என்று பிரதமர் மோடி பேசினார்.


 

click me!