பிரதமரின் பொய்யை டெலிபிராம்டரால் கூட தாங்க முடியல... பிரதமர் மோடியை கலாய்த்த ராகுல் காந்தி.. ட்விட்டரில் வைரல்

By Raghupati RFirst Published Jan 19, 2022, 6:38 AM IST
Highlights

உலகப் பொருளாதார மன்றத்தின் டோவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி டெலிபிராம்ப்ட்டரை பார்த்து வாசித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சற்று தடுமாறினார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் மாநாடு சுவிட்சலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் காணொலி மூலம் பங்கேற்று பேசி வருகின்றனர். நேற்று இரவு மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது டெலிபிராம்டர் கருவி திடீரென பழுதானதால் பிரதமர் உரை தடைபட்டது.

சில நொடி தடுமாற்றத்திற்கு பிறகு சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி நேரலையில் இருந்த உலக பொருளாதார ஊட்டமைப்பு நிர்வாகியிடம் தனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? என்று கூறி நிலைமையை ஓரளவுக்கு சமாளித்தார். இதனையடுத்து டெலிபிராம்டர் கருவி சரியானதும் தனது சிறப்புரையை பிரதமர் தொடர்ந்தார். சர்வதேச நேரலை நிகழ்வு ஒன்றில் டெலிபிராம்டர் கருவி பழுதானதால் பிரதமர் உரை தடைபட்டது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த காணொளி வைரலாகி வருகிறது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  ‘டெலிபிராம்டரால் கூட பிரதமரின் பொய்யை தாங்க முடியவில்லை என்று கிண்டல் செய்துள்ளார். பிராம்டரும் அதனை இயக்குபவரும் இல்லை என்றால் பிரதமர் மோடியால் உரையாற்றவே முடியாது’ என்று ராகுல் காந்தி முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்த காணொளியும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

इतना झूठ Teleprompter भी नहीं झेल पाया।

— Rahul Gandhi (@RahulGandhi)

பேசுவதற்கு குறிப்பு கொடுக்கும் டெலிபிராம்டர் பழுதானதால் பிரதமர் மோடி தடுமாறியது சமூக ஊடகங்களிலும் நேற்று இரவு முதல் விவாத பொருளாகி உள்ளது. #TeleprompterPM என்ற ஹேஸ்டேக்க்கும் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. தொழில்நுட்ப கோளாறை வைத்து பிரதமரை விமர்சிப்பதா? என்று பாஜகவினரும் சமூக வலைதள விமர்சகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி திணறிய காணொளியும், ராகுல் காந்தியின் ட்வீட்டும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!