#Breaking : கடற்படை தளத்தில் வெடி விபத்து... 3 வீரர்கள் உயிரிழப்பு... மும்பையில் உச்சக்கட்ட பரபரப்பு!!

Published : Jan 18, 2022, 10:14 PM IST
#Breaking : கடற்படை தளத்தில் வெடி விபத்து... 3 வீரர்கள் உயிரிழப்பு... மும்பையில் உச்சக்கட்ட பரபரப்பு!!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  


இதையடுத்து உடனடியாக ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த கப்பல் இந்திய கப்பல் படையின் முக்கிய கப்பல்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்பு நடவடிக்கை ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 


மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்று கண்டறிய வேண்டும் என்றும் கப்பல் படைத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து வேறு யாரேனும் கப்பலின் உள்பகுதியில் சிக்கி இருக்கிறார்களா? யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா? என்று கண்டறியும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. ரன்வீர் போர் கப்பல் இந்திய கடற்படையில் 1986 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!