ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்... யாருனு தெரியுமா?

Published : Jan 18, 2022, 10:48 PM IST
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்... யாருனு தெரியுமா?

சுருக்கம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் விக்ரம் தேவ் தத் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் விக்ரம் தேவ் தத் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட விக்ரம் தேவ் தத் இதற்கு முன்பு டெல்லி அரசாங்கத்தின் பொதுச்சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்தார். 2020 ஆம் ஆண்டு டெல்லியில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்த நிலையில் தான் விக்ரம் தேவ் தத் தலைநகரின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதன் தலைவராக தத் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு விற்றதாக மத்திய அரசு அறிவித்தது. ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியுள்ளது.

68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை டாடா மீண்டும் தன்வசப்படுத்தியது. முன்னதாக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே சென்றுள்ளது. ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.

1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவது இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்ததாக கூறப்பட்டது. அதன்படியே தற்போது ஏர் இந்தியா, டாடா கைக்கு மாறியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!