விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பில் பிரதமர் மோடி - சிகார் தவானுடன் பஞ்சாபி நடனமாடிய அனுஷ்கா

 
Published : Dec 22, 2017, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பில் பிரதமர் மோடி - சிகார் தவானுடன் பஞ்சாபி நடனமாடிய அனுஷ்கா

சுருக்கம்

Prime Minister Modi congratulated Virat Kohli on his wedding reception.

டெல்லியில் நடந்த, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, நடிகை அனுஷ்கா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

மேலும் ,மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் கடந்த 11ந் தேதி இத்தாலி நாட்டில் உள்ள டஸ்கேனி நகரில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி உள்ளிட்ட பலரை விராத் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நேரில் சென்று அழைப்பு விடுத்து இருந்தனர்.

தாஜ் பேலஸ் ஓட்டலில் நேற்றுமுன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சிவப்பு நிற பெனாசாரி புடவையைஅனுஷ்கா சர்மா உடுத்தி இருந்தார். மேலும், கையில் மெகந்தி, நெற்றியில் திலகம், கழுத்து நிறைய தங்க நகைகள் ஆகியவற்றை அவர் அணிந்து இருந்தார்.

விராத் கோலி கருநீல பட்டில் ‘பந்த்கலா’ எனும் உடையும், அதில் ‘18கேரட்’ தங்கத்தில் பட்டன்களும் வைத்த உடையை அணிந்து இருந்தார். மேலும், கையால் நையப்பட்ட பட்டு ‘பாஷ்மினா ஷால்’ விராத் கோலி அணிந்திருந்தார். விராத் கோலி, அனுஷ்கா ஆகியோரின் உடைகளை சப்யாசாக்‌ஷி என்ற ஆடை வடிவமைப்பு கலைஞர் வடிவமைத்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்ததும், அவரை விராத் கோலியும், அனுஷ்காவும் நேரில் சென்று வரவேற்றனர். அவர்களுக்கு ஒற்றை ரோஜா கொடுத்து பிரதமர் மோடி வாழ்த்தினார். மேலும், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வந்திருந்தனர். 

கிரிக்கெட் வீரர்கள் சிகார் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட  வீரர்கள் பலர் வந்திருந்தனர். மேலும், விராத் கோலி, அனுஷ்கா ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

பஞ்சாபி பாடகர் குருதாஸ் மான் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கோலியும், விராத் கோலியும் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி அசத்தினர். நிகழ்ச்சியின் இடையே அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர்சிகர் தவனுடன் பஞ்சாபி நடனம் ஆடினார். மேடையில் ஏறிய இருவரும் அனைவரையும், வரவேற்று பேசினர், அதேபோல, முடிக்கும் போது நன்றி கூறி விடைபெற்றனர். 

கிரிக்கெட வீரர்கள் மற்றும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களுக்கான 2-வது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 26-ந்தேதி நடத்த அனுஷ்கா, கோலி தம்பதி திட்டமிட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!