சுதந்திர தின அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடு கட்ட மலிவு கடன் வழங்குவதை உறுதி செய்வது குறித்து மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். பிரதமரின் முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா மற்றும் கேபினட் செயலாளர் ராஜீவ் கௌபா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15, நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ நகரங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சொந்த வீடு கட்டுவதற்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை அரசு கொண்டு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். நகரங்களில் வாடகை வீடுகள், குடிசைகள், சாவல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் குடும்பங்கள் பயனடையும் வகையில் வரும் ஆண்டுகளில் புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளோம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்திற்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் அரசாங்கம் 79,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த நிதியில், சுமார் ரூ.54,000 கோடி PMAY-கிராமின் திட்டத்திற்கும், சுமார் ரூ.25,000 கோடி PMAY-நகர்பன் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.