உயிர்தான் முக்கியம்…மரியாதை அல்ல…!!! - ஆம்புலன்சுக்காக வழிவிட்ட ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி...

Asianet News Tamil  
Published : Jul 14, 2017, 08:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
உயிர்தான் முக்கியம்…மரியாதை அல்ல…!!! - ஆம்புலன்சுக்காக வழிவிட்ட ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி...

சுருக்கம்

President Pranab Mukherjee who is traveling in the state of West Bengal came to know the arrival of ambulance when he came down the road today

மேற்கு வங்க மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று சாலை மார்க்கமாக வந்தபோது, ஆம்புலன்ஸ் வருகையை அறிந்து அதற்கு வழிவிட்டு அவரும், அவரின் பாதுகாப்புபடையினரும் ஒதுங்கினார்.

மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சென்றார்.முர்ஷிதாபாத்தில் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கனிதிகி என்ற நகரில் ஒரு பள்ளிக்கூடத்தை தொடங்கி வைக்கும் விழாவில் அவர் கலந்து கொள்ளச் சாலை மார்க்கமாக சென்றார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செல்லும் வாகனம் முன்னும், பின்னும் அவரின் 20 பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் அணிவகுத்துச் சென்றன. அப்போது, திடீரென சாலையில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. 

இதை அறிந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கார், மட்டுமின்றி, அனைத்து பாதுகாப்பு வாகனங்களும் ஒரு நிமிடம் சாலையின் ஓரமாக ஒதுங்கி, ஆம்புலன்ஸ்வாகனம் தடங்கலின்றி செல்ல வழி வகுத்துக்கொடுத்தன.

இதைப் பார்த்துக்கொண்டு இருந்த சாலையில் திரண்டு இருந்த மக்கள் பிரணாப் முகர்ஜியின் செயலை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்