பலத்த எதிர்ப்பு , எதிர்பார்ப்புக்கு இடையே...ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது

 
Published : Jul 01, 2017, 12:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
பலத்த எதிர்ப்பு , எதிர்பார்ப்புக்கு இடையே...ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது

சுருக்கம்

president pranab mukargi intoduced gst

பலத்த எதிர்ப்பு , எதிர்பார்ப்புக்கு இடையே...ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது80 சதவீத பொருட்கள் 18 % வரிக்குள் வந்தது; ஒரு கோடி வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தனர்.

சுதந்தரத்துக்கு பின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு  நாடு முழுவதும் நள்ளிரவு முதல் வெற்றிகரமாக அமல்படுத்தியது.

ஏறக்குறைய 80 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிக்குள்ளாகவே கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி. வரியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் 130 கோடி மக்கள், ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரம் ஒரே சந்தைக்குள் வந்தது.

நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடந்த ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் தி.மு.க. கட்சிகள் புறக்கணித்தன.

70ஆண்டுகளாக

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக  ஒரு பொருளுக்கு பல்வேறு கட்டங்களில் விரி விதிப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.  இதனால், பொருட்களின் விலை மாநிலத்துக்கு மாநிலம், வேறுபட்டு வந்தது.

இதையடுத்து மாநிலம் மற்றும் மத்திய அரசில் கடைபிடிக்கப்பட்டு வந்த உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி உள்ளிட்ட 16 வகையான வரிகளை ஒழித்து நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஜி.எஸ்.டி. வரி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு இந்த ஜி.எஸ்.டி.யை உருவாக்கி, கொண்டு வர முயன்றது, ஆனால்,முடியவில்லை. இதையடுத்து, மத்தியில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஜி.எஸ்.டி. மசோதாவில் உள்ள குறைபாடுகளை களைந்து, நாடாளுமன்றத்தில்  அறிமுகப்படுத்தி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.

நிறைவேற்றம்

மத்தியஅரசுக்கான ஜி.எஸ்.டி(சி.ஜி.எஸ்.டி.), மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி.(எஸ்.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.(ஐ.ஜி.எஸ்.டி.), மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி.(யூ.ஜி.எஸ்.டி.) ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மாநில சட்டசபைகளிலும் நிறைவேறின.

அதில் ஜம்மு  காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது. இந்த சட்டத்துக்கும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

 வரி விதிப்பு குறித்து ஆலோசிக்க நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில், மாநிலங்களின் நிதி அமைச்சர்களைக் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் உருவாக்கப்பட்டது. 17 முறை கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் 1200 பொருட்கள், சேவைகளுக்கான வரியை நிர்ணயம் செய்தது. வரி வீதங்களை 5, 12, 18, 28 சதவீதங்களில் முடிவு செய்தது.

வரி விதிப்பு விகிதங்கள் குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா நேற்று நிருபர்களுக்கு அளித்த  பேட்டியில் கூறியதாவது-

வௌிப்படைத்தன்மை

நாட்டில் 70 ஆண்டுகாலம் பின்பற்றப்பட்ட வந்த மறைமுக வரிகள் நீக்கப்பட்டு புதிய வரிவிதிப்பு முறைாக ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பில் வௌிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டு, வரி ஏய்ப்பு தடுக்கப்படும், நேர்மையாக வரி செலுத்துவோர்களுக்கு நலம் அளிக்கும்.

வரி குறையும்

இதற்கு முன்னதாக ரூ.10 லட்சம் வரை விற்றுமுதல் உள்ளவர்கள் வாட் வரியை முழுவதும் செலுத்தினார்கள். ஆனால், இப்போது, ரூ.20 முதல் 75 லட்சம் வரை விற்றுமுதல் உள்ளவர்களுக்கு 2.5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ரூ.20 லட்சத்தக்குள் விற்றமுதல் இருப்பவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் செய்பவர்கள்

சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ‘காம்போசிஷன் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. ஆண்டுக்கு ரூ.75 லட்சம் வரை விற்றுமுதல் இருக்கும் உற்பத்தியாளர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்தினால் போதும், வர்த்தகர்கள் 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.

விலை குறையும்

ஜி.எஸ்.டி. வரி மூலம் வீடுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறையும். 81 வகையான பொருட்களுக்கு வரி 18 சதவீதத்துக்குள் வந்துவிடும் என்பதால் விலை கனிசமாகக் குறையும். மேலும், வருமானவரி ரிட்டனும் ஆன்-லைனில் செலுத்துவதால், அனைத்தும் எளிதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு கோடி வர்த்தகர்கள்....

மத்திய விமானப் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், “ பிரதமர் மோடி அரசு செய்துள்ள வரிச்சீர்திருத்தம் அனைத்தையும் எளிதாக்கும். ஏறக்குறைய ஒரு கோடிக்கும் அதிகமான வர்த்கர்கள், தொழில் செய்பவர்கள், சிறு, குறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்துள்ளனர். தற்போது 80 லட்சம் தனிமனிதர்கள், நிறுவனங்கள் பல்வேறு மாநிலஅரசு, மத்தியஅரசின் வரிகள் செலுத்தி வருகிறார்கள். இனி ஒரே வரிமட்டும் செலுத்துவார்கள். ஜி.எஸ்.டி. என்பது அரசியல் சார்ந்த பிரச்சினை இல்லை. இது, வரிச் சீர்திருத்தம். புரட்சியை உருவாக்கும்’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!