
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் இந்தியா புதிய பாதையில் பயணம் மேற்கொள்ளும் என்றும், கறுப்புப் பணத்தையும், ஊழலையும் ஜிஎஸ்டி கட்டுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தின் உச்சநிலை இது என்றார்.
ஜிஎஸ்டி என்பது பாஜகவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல என்றும் அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.
மிகப்பெரிய முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிய இந்த நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கூட்டம் நடைபெறுவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மோடி கூறினார்.
நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததைப் போல ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரவும் சிறப்பு வாய்ந்தது என மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார அமைப்பை நடைமுறைப்படுத்துவதில் ஜிஎஸ்டி ஒரு மைல் கல் என்றும், ஜிஎஸ்டி மூலம் இந்தியா புதிய பாதையில் பயணம மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதுபோல், 18 கூட்டங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருவதாக மோடி கூறினார்.
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் இந்தியா புதிய பாதையில் பயணம் மேற்கொள்ளும் என்றும், கறுப்புப் பணத்தையும், ஊழலையும் ஜிஎஸ்டி கட்டுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.