வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த குடியரசுத் தலைவர்- அமலுக்கு வந்தது சட்டம்!!

Ajmal Khan   | ANI
Published : Apr 06, 2025, 07:13 AM ISTUpdated : Apr 06, 2025, 08:53 PM IST
வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த குடியரசுத் தலைவர்- அமலுக்கு வந்தது சட்டம்!!

சுருக்கம்

எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் (திருத்த) மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 

Waqf Amendment Bill 2025 : வக்ஃப் (திருத்த) மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் லோக்சபா நீண்ட விவாதத்திற்குப் பிறகு 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 பேர் எதிர்த்தும் வாக்களித்து மசோதாவை நிறைவேற்றியது. ராஜ்யசபா இந்த மசோதாவை வெள்ளிக்கிழமை 128 வாக்குகள் ஆதரவாகவும், 95 வாக்குகள் எதிராகவும் நிறைவேற்றியது.

இதனையடுத்து குடியரசு தலைவர்கள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சட்ட அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.



வக்ஃப் (திருத்த) மசோதா குடியரசு தலைவர் ஒப்புதல்

முன்னதாக, வக்ஃப் (திருத்த) மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது ஒரு "முக்கிய தருணம்" என்றும், இது ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு உதவும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி கூறினார். "வக்ஃப் (திருத்த) மசோதா மற்றும் முஸ்லிம் வக்ஃப் (ரத்து) மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றியது, சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான நமது கூட்டு முயற்சியில் ஒரு முக்கியமான தருணமாகும். இது நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு குறிப்பாக உதவும், இதனால் குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டது," என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறினார்.

வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து திருத்தப்பட்டது. இது இந்தியா முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய அம்சங்களில் பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் வக்ஃப் வாரிய செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை இணைத்தல் ஆகியவை அடங்கும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

முந்தைய சட்டத்தின் குறைபாடுகளைக் களைந்து, வக்ஃப் வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் வக்ஃப் பதிவுகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என பாஜக சார்பாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்த மசோதாவிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!