கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்த அரசு மருத்துவமனை: நடுரோட்டில் நடந்த பிரசவம்

First Published Oct 17, 2016, 12:25 AM IST
Highlights


மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் நடுரோட்டில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

கர்நாடகம் - மகாராஷ்ட்ரா எல்லையில் அமைந்துள்ள கிராமத்தில் வசிப்பவர் சுரேகா திலீப். மகாராஷ்ட்ராவில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சுரேகாவை, அவரின் உறவின்ரகள் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் இருந்த செவிலியர், சுரேகாவுக்கு ரத்த அழுத்தம் சோதனை செய்துள்ளார். ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவரோ, சுரேகாவுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை, உடனடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறியுள்ளார். வேறு மருத்துவமனை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் 

ஏற்பாடு செய்ய சுரேகாவின் உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கும் ஏற்பாடு ஏதும் செய்து தரப்படவில்லை.

இதனால், சுரேகாவின் உறவினர் பதற்றத்தில் ஏதும் செய்ய இயலாமல் தவித்துள்ளனர். சுரேகாவை, மருத்துவமனை வளாகத்திலே உட்கார வைத்திருந்தனர். இந்த நிலையில், சுரேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மருத்துவமனையில் இருந்த பெண் மருத்துவரிடம் பிரசவம் பார்க்கும்படி கேட்டுள்ளனர். ஆனால், அந்த மருத்துவரோ, அவர்களை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

 

இதனை அடுத்து, சுரேகாவை, வேறு மருத்துவமனை கொண்டு செல்ல முடிவெடுத்து, அவரை அழைத்து செல்ல முடிவெடுத்தனர். சாலையில் சென்ற கொண்டிருந்தபோது சுரேகாவுக்கு பிரசவ வலி அதிகமாகி மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவத்துக்குப் பிறகு, மீண்டும் மருத்துவமனை சென்று சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுரேகாவின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதனை ஏற்ற அரசு பெண் மருதுதுவர், அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

 

இந்த சமபவம் கறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சுரேகாவையும், குழந்தையையும் பார்த்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

click me!