
மேற்கு வங்க மாநிலத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில், பாம்பு விஷம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட அவர்கள், அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற 4 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த 250 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பாம்பு விஷம் கடத்தப்படவிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.