அரசு மருத்துவமனை வாசலில் பெற்றெடுத்த குழந்தை..! ஆதார் இல்லாததால் அவலம்..!

First Published Jan 30, 2018, 12:56 PM IST
Highlights
pregnant lady gave birth at door of govt hospital due to no adhar card


மருத்துவமனை வாசலில் பெற்றெடுத்த குழந்தை..! ஆதார் இல்லாததால் அவலம்..!

ஆதார் இல்லாததால் மருத்துவ மனை வாசலில் குழந்தையை பெற்றெடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில், ஜான்பூர் மாவட்டத்தில் ஷாகஞ்ச் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக  அழைத்து சென்று உள்ளனர்.

அப்போது அரசு மருத்துவமனையில்,ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரம் என  அனைத்தும் கேட்டு உள்ளனர்.

ஆனால் இவை எதுவும்  தங்களிடம் இல்லை என்றும்,முதலில் சிகிச்சை அளியுங்கள் என கர்ப்பிணியின் கணவர் கேட்டுள்ளார்.

இருந்த போதிலும்,சிகிச்சை அளிக்க மறுத்தால்,அவர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில்,மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது வாசலிலேயே அப்பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதே சமயத்தில் அரசு  மருத்துவமனையில் இது போன்ற நிலைமை என்றால்,வேறு எங்கு செல்ல முடியும் என ஏழை எளிய  மக்கள் வேதனை  தெரிவித்து உள்ளனர்.

எப்படியோ நல்ல முறையில் எந்த ஆபத்தும் இல்லாமல் குழந்தை பிறந்துவிட்டது. ஏதாவது நடந்திருந்தால் உயிருக்கு யார் பொறுப்பு என  பலரும்  கண்டனம்  தெரிவித்து  உள்ளனர்.

click me!