'மகா கும்பமேளா 2025' எற்பாடுகள்; ஸ்வச் பாரத் இயக்குனர் பாராட்டு!

By Rayar r  |  First Published Dec 30, 2024, 4:46 PM IST

மகா கும்பமேளா 2025-க்கான ஏற்பாடுகளைப் பார்வையிட பிரயாக்ராஜ் வந்த ஸ்வச் பாரத் மிஷன் இயக்குநர், மாநகராட்சியின் பணிகளைப் பாராட்டினார். AI கண்காணிப்பு மற்றும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்வு செய்வதையும் பாராட்டினார்.


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட பிரயாக்ராஜ் சென்ற ஸ்வச் பாரத் மிஷன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இயக்குனர் பினய் குமார் ஜா ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கட்டிடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விசாரித்தார். 

நகரின் AI கண்காணிப்பு மற்றும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்வு செய்வதைக் கண்ட அவர் மாநகராட்சியின் பணிகளைப் பாராட்டினார். மேலும், நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக முழு அணியினரையும் பாராட்டினார். தினமும் 70 கிலோமீட்டர் வரை முக்கிய சாலைகளைக் கண்காணிப்பது பாராட்டுக்குரியது என்றார். 

Tap to resize

Latest Videos

நகரத்தில் ஆக்கிரமிப்புகள், சாலையோரக் குப்பைகள், பழுதடைந்த தெருவிளக்குகள், தெரு நாய்கள் போன்றவற்றைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது ஒரு சாதனை என்றார். இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் கர்க், இயக்குநர் பினய் ஜாவுக்கு மகா கும்பமேளா 2025 நினைவுப் பரிசை வழங்கினார்.

 

Cleanliness Drive in Prayagraj!

Mr. Binay Kumar Jha, Director of Clean India Mission (SBM-U), recently visited Prayagraj ahead of Maha Kumbh to inspect the city's cleanliness and sanitation efforts. pic.twitter.com/l99C4lAnvN

— Swachh Uttar Pradesh 2.0 (SBM, Urban) (@SBM_UP)

 

மகா கும்பமேளா ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளன

இயக்குநர் பினய் ஜா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியால் பிரயாக்ராஜில் நிறுவப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் முதல் சி அண்ட் டி ஆலையைப் பார்வையிட்டார். மேலும், பஸ்வாராவில் உள்ள பாரம்பரிய தளத்தையும் பார்வையிட்டார். இந்த சமயத்தில், மாநகராட்சி மேற்கொண்டுள்ள பணிகளைப் பாராட்டினார். மகா கும்பமேளாவில் பக்தர்களுக்குச் சுத்தம் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். 

''சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவுக்காக மாநகராட்சி மேற்கொண்டு வரும் அனைத்துப் பணிகளும் திருப்திகரமாகவும் பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. மிகவும் சிறப்பாக உள்ளது, தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்'' என்று அவர் தெரிவித்தார். 

click me!