உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனையில் முதல் பிரசவம் நிகழ்ந்துள்ளது. 20 வயது சோனம் என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள் முதல் பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தினர். மருத்துவர் கவுரவ் துபே தலைமையிலான மூன்று மருத்துவர்கள் குழு சோனம் என்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இது குறித்து மகா கும்பமேளா நோடல் மருத்துவ அதிகாரி மருத்துவர் கவுரவ் துபே கூறுகையில், ''மகா கும்பமேளா நகரில் உள்ள மத்திய மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்துள்ளது. 20 வயது சோனம் என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.4 கிலோ. மருத்துவர் கவுரவ் தலைமையில் மருத்துவர் நூபூர் மற்றும் மருத்துவர் வர்திகா ஆகியோர் இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையை செய்தனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், மகா கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் முதல் முறையாக பிரசவ வசதியும் வழங்கப்படுகிறது. இங்கு பிரசவ அறை அமைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.