
பாஜகவுடன் ஒட்டும், உறவும் இல்லையென்றால் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியை உங்கள் எம்.பி. ஹரிவன்ஸ் நாராயன் சிங் ஏன் வகித்து வருகிறார் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருடன் கருத்து வேறுபாடால் கட்சியிலிருந்து விலகினார்.
தீபாவளிக்காக! 27ம்தேதிவரை போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் இல்லை! குஜராத் அரசு திடீர் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வத்ராவை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸை விமர்சித்து கட்சியில் சேரவில்லை என்று பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்தார்.
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்திய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், 2 ஆண்டுகள் முடிவில் திடீரென கூட்டணியிலிருந்து விலகினார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்த நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைத்தபின் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: முழுவர்த்தக ரீதியாக முதல் பயணம்
இந்நிலையில் அரசியல்வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் நிதிஷ் குமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் “ நிதிஷ் குமார்ஜி உங்களுக்கும், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே எந்தவிதமான ஒட்டும் உறவும் இல்லை என்றால், உங்கள் எம்.பி. ஹரிவன்ஸ் நாராயன் சிங்கை மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகக் கூற வேண்டியதுதானே. எப்போதுமே இரு வழிகளை வைத்துக்கொண்டிருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் நேற்று அளித்த பேட்டியில் “ 17 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதல்வராக இருக்கிறார். இதில் 14 ஆண்டுகள் பாஜகவின் ஆதரவில் இருந்தார்.
எனக்குத் தெரிந்தவரை நிதிஷ்குமார் இப்போது மகாகட்பந்தன் கூட்டணியில்தான் இருக்கிறார். ஆனாலும், பாஜகவுடனான கதவுகளை திறந்தே வைத்துள்ளார். அதற்கு மிகப்பெரிய உதாரணம், இன்னும் மாநிலங்களவைத் துணைத் த லைவர் பதவியிலிருந்து தங்களின் எம்.பி. ஹரிவன்ஸை ராஜினாமா செய்யக் கூறவில்லை.அவர் விலகாவிட்டால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அதையும் செய்யவில்லை.
ரோஜ்கர் மேளா தொடக்கம்:100 ஆண்டு வேலையின்மை சிக்கலை 100 நாட்களில் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி
மாநிலங்களவையில் முக்கியமான பொறுப்பில் அவரின் எம்பி இருக்கும்போது நிதிஷ் குமார், ஏன் தேசியஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினார் என்பது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. பாஜகவுடனான கதவுகளை இன்னும் முழுமையாக மூடவில்லை என்று தெரிகிறது” எனத் தெரிவித்தார்