வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. அக்.24 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் - வானிலை

By Thanalakshmi V  |  First Published Oct 22, 2022, 1:56 PM IST

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 24 ஆம் தேதி புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


அந்தமான கடல்  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது.

மேலும் படிக்க:இன்று 28 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Tap to resize

Latest Videos

இது மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மணடலமாக உருமாறும். நாளை இது ஆழந்த  காற்றழுத்த தாழ்வு மணடலமாக வலுப்பெற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஆழந்த  காற்றழுத்த தாழ்வு மணடலமானது வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்.24 ஆம் தேதி புயலாக உருவாகும். இந்த புயல் சின்னம், அக்.25 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க:வங்கக்கடலில் "SITRANG" புயல் உருவாகிறது.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

click me!