Prakash Javadekar: ஏசியாநெட் அலுவலகத் தாக்குலுக்கு பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

Published : Mar 05, 2023, 10:15 AM ISTUpdated : Mar 05, 2023, 02:53 PM IST
Prakash Javadekar: ஏசியாநெட் அலுவலகத் தாக்குலுக்கு பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

சுருக்கம்

பாஜக எம்பி பிரகாஷ் ஜவடேகர் கொச்சியில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் அமைந்துள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் SFI அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அத்துடன் அங்குள்ள ஊழியர்களையும் மிரட்டியச் சென்றனர். வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.  சனிக்கிழமை திருச்சூர், கன்னூர் உள்ளிட்ட கேரளாவில் பல இடங்களில் இத்தாக்குதலைக் கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடைபெற்றன.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது! குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ்!

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மாநிலங்களைவை உறுப்பினருமான பிரகாஷ் ஜவடேகர் கொச்சியில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஏசியாநெட் நியூஸ் மீது SFI நடத்தியுள்ள இந்தக் மோசமான பயங்கரத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். செய்தி குறித்து கருத்து வேறுபாடு இருந்து முறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது" என்று அவர் கூறினார்.

மேலும், "அலுலவகத்தில் இருந்த பணியாளர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். நான் இதைக் கண்டிப்பதுடன் அலுலவகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை மாநில அரசு கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தினார்.

இதனிடையே, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஈ.பி.ஜெயராஜன்,  தனக்கு இந்தச் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று கூறினார். அவரிடம் விசாரித்தபோது, "சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரித்து பின்னர் கருத்து தெரிவிக்கிறேன்" என்றார்.

ராகுல் காந்தி பேச்சால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம்: அமைச்சர் ராஜீவ் பதிலடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!