அந்தரங்க இடத்தில் கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்த கர்ப்பிணி பெண்...! பிரசவ வார்டில் அதிர்ச்சியான மருத்துவர்கள்...!

 
Published : May 28, 2018, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
அந்தரங்க இடத்தில் கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்த கர்ப்பிணி பெண்...! பிரசவ வார்டில் அதிர்ச்சியான மருத்துவர்கள்...!

சுருக்கம்

pragnent lady arrest in kanja case

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய அந்தரங்க இடத்தில் 1 கிலோ அளவிற்கு கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கிளோரியா என்கிற 37 வயது பெண் தன்னுடைய வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை, தன்னால் உணரமுடியவில்லை என கூறி, பிரபல தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்பதால், இவரை பிரசவ வார்டுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். அப்போது இவர் கர்பிணி இல்லை என தெரியவர  மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இவரது வயிறு மற்றும் அந்தரங்க பகுதியில் 1 கிலோ எடை கொண்ட கஞ்சாவை இவர் மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

போலீசார் இந்த பெண் மீது ஆரோக்கியத்திற்கு எதிரான குற்றப்பிரிவில், வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

ஆனால் இது குறித்து தெரிவித்துள்ள இந்த பெண், கஞ்சா எங்கிருந்து வந்தது என தனக்கு தெரியாது என்று கூறி இவர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இவர் ஏற்க்கனவே கடந்த 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு