
முன்னே 6 மாத கர்ப்பிணி பெண்ணை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மாறி மாறி கற்பழித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயது கர்ப்பிணி. இவர் அரியானா மாநிலத்தில் உள்ள மானேசர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் குடியிருந்து வருகிறார். அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனைக்கு பிறகு அவர் தனது கணவருடன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
ஆப்போது, சைக்கிளில் செல்வது அசவுகரியமாக இருந்ததால் ஆட்டோ பிடித்து வீடு வருமாறு கூறிவிட்டு கணவர் சென்று விட்டார். கர்ப்பிணி பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் அந்த 3 பேரும் கர்ப்பிணி பெண் என்று கூட பாக்காமல் மாறி மாறி கற்பழித்தனர்.
பிறகு அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால் அந்த வழியே சென்றவர்கள் ஓடி வரவே அப்போது அவர்கள் அந்தபெண்ணை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.இது தொடர்பாக, அந்த பெண்ணும் அவரது கணவரும் 4 தினங்களுக்கு பிறகு போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.