சக்திவாய்ந்த அக்னி-1 சோதனை வெற்றி

 
Published : Nov 22, 2016, 04:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சக்திவாய்ந்த அக்னி-1 சோதனை வெற்றி

சுருக்கம்

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடிய, அதிக திறன் கொண்ட, அக்னி-I ஏவுகணை சோதனை, வெற்றி அடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையான அக்னி-I,  தரையில் இருந்து 350 கி.மீ.,தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறனுடையது என்றும், 500 முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா ஏவுதளத்தில் இன்று செலுத்தப்பட்ட அக்னி-I ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று இதே ஒடிசா ஏவுதளத்தில் இருந்து, இந்தியாவின் மற்றொரு சக்தி வாய்ந்த ஏவுகணையான பிரித்வி-2 சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"