இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு… அறிவித்தது மத்திய சுகாதாரத் துறை!!

By Narendran S  |  First Published Sep 1, 2022, 12:09 AM IST

இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 


இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து 50 சதவிகித அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50 சதவிகித மாநில இடங்களுக்கும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பணிப்பெண்ணை சித்திரவதை செய்த புகாரில் சீமா பத்ரா கைது... இது பொய்யான குற்றச்சாட்டு என கூச்சல்!!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தரவரிசைப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்க முடியாது என நீதிபதி சந்திரசூட் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க: மரத்தில் கட்டிவைத்து ஆசிரியருக்கு அடி, உதை: தேர்வில் தேர்ச்சியடைய வைக்காததால் மாணவர்கள் ஆத்திரம்

இதனிடையே செப்டம்பர் 1 ஆம் (இன்று) நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நீட் முதுகலை கலந்தாய்வில் மேலும் கூடுதல் இருக்கைகளை சேர்ப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!