பரப்புரையை ரத்து செய்து தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? பிரதமருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஐகோர்ட்..!

Published : Dec 24, 2021, 10:06 AM IST
பரப்புரையை ரத்து செய்து தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? பிரதமருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஐகோர்ட்..!

சுருக்கம்

இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.

ஒமிக்ரான் பரவலை தடுக்க சட்டமன்ற தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்வதுடன், தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளிவைக்குமாறு  பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என வியூகம் அமைத்து அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல பிரதமர் மோடியே உத்தரப் பிரதேசத்திற்குக் கடந்த சில வாரங்களில் பல முறை சென்று, பல முக்கிய நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இந்நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்திவைக்க அலகாபாத்  உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கும், பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து, வானொலி, தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தரவிட வேண்டும். தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்துவதாக இருந்தால், அதை 2 மாதங்கள் ஒத்திவைக்கலாம். உயிர் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி செய்து பிரச்சாரங்கள், முயற்சிகளுக்கு பாராட்டுகள். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த பிரதமர் மோடியை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த முறை 2வது அலை பரவ முக்கிய காரணம் உத்தர பிரசேத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தல், மேற்குவங்கம், தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!