பரோட்டா சாப்பிக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பரோட்டா சாப்பிக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூம்பாறை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(35). இவர் லாரியில் லோடு இறக்கும் தொழில் செய்து வந்ததார். நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் இருந்து இடுக்கி மாவட்டம் கட்டப்பனைக்கு உரம் ஏற்றிய லாரியில் இருந்துலோடு இறக்குவதற்காக பாலாஜி கட்டப்பனைக்கு சென்றார்.
இதையும் படிங்க;- உன் பொண்டாட்டி அருவியில் நிர்வாணமா குளிச்சா ஆம்பள புள்ள பொறக்கும்!மந்திரவாதி பேச்சை கேட்டு கணவர் செய்த காரியம்
இரவில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மற்றும் ஆம்லெட் வாங்கி லாரியில் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென பாலாஜிக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கட்டப்பனையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரோட்டா தொண்டையில் சிக்கியது தான் மரணத்திற்கு காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க;- ப்ளீஸ் என்ன விட்டுடுங்க வலி தாங்க முடியல! கதறிய பெண்ணை விடாமல் கூட்டு பலாத்காரம்!சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது