சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான அரவணப் பாயாசத்தில் சேர்க்கப்படும் ஏலக்காய் தரமற்றதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்குப் பிரசாதமாக அரவண பாயாசம் வழங்கப்படுகிறது.
இந்தப் பிரசாதத்தில் சேர்க்கப்படும் ஏலக்காய் தரக்குறைவானதாக உள்ளது என்று உணவு தரப்பரிசோதனை செய்யும் ஆய்வகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை முன்வைத்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் காவியில் வனத்துறை பராமரிப்பில் உள்ள ஏலக்காய் தோட்டத்திலிருந்துதான் அரவண பாயாசம் தயாரிக்க ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இப்போது, ஐயப்பா ஸ்பைசஸ் என்ற நிறுவனம் ஏலக்காய் வழங்குகிறது.
இந்த நிறுவனம் அளிக்கும் ஏலக்காய்களில் அவளவுக்கு அதிகமாக வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வறிக்கை குற்றம்சாட்டுகிறது. இதனால், இந்த ஆய்வறிக்கை வியாழக்கிழமை உயர் நீதிமன்ற தேவசம் போர்டு அமர்வு முன்பு சமர்ப்பிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, அரவண பாயாசத்தை இன்னும் தரமான வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று சபரிமலை சிறப்பு கமிஷனரே உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது நினைவூட்டத்தக்கது.
குற்றாலம் சித்திர சபையில் 16 வகை மூலிகைகளால் அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்