“உங்கள் கலை பயணத்தை தொடர ஆதிபராசக்தியை பிரார்த்திக்கின்றேன்” ரஜினிகாந்த் காலில் காயம் - பொன்.ராதாகிருஷ்ணண் வாழ்த்து

Asianet News Tamil  
Published : Dec 04, 2016, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
“உங்கள் கலை பயணத்தை தொடர ஆதிபராசக்தியை பிரார்த்திக்கின்றேன்” ரஜினிகாந்த் காலில் காயம் - பொன்.ராதாகிருஷ்ணண் வாழ்த்து

சுருக்கம்

நடிகர் ரஜின்காந்த் காலில் காயம் ஏற்பட்டதை அறிந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “உங்கள் கலை பயணத்தை தொடர ஆதிபராசக்தியை பிரார்த்திக்கின்றேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், டைரக்டர் ஷங்கர் இயக்கும் ‘2.0’. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்ஷ்ய்குமார், நடிகை எமி ஜாக்சன் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ படத்தின் 2ம் பாகமாக இந்த படம் தயாராகிறது. இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். படப்பிடிப்பை வேகமாக முடித்து, அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ‘2.0’ படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று மதியம், சென்னை அருகே மேலகோட்டையூர் பகுதியில் படப்பிடிப்பு நடந்த்து. ரஜினிகாந்த் பங்கு பெறும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்து, உடனே அவர் வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் காலில் காயம் ஏற்பட்டதால், ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு செய்யப்பட்டது. 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் சம் தப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து  பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, தங்களுக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதை ஊடக செய்திகள் மூலம் அறிந்தேன். விரைவில் நீங்கள் பூரண குணமடைந்து உங்களது கலைப் பயணத்தை தொடர எல்லாம்வல்ல அன்னை ஆதிபராசக்தியிடம் பிரார்த்திக்கின்றேன் என கூறப்ப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?