9 மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்..மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..

Published : Feb 02, 2022, 09:57 PM IST
9 மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்..மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..

சுருக்கம்

கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுவை மற்றும் தமிழக மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்  

புதுவை மற்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல், கடந்த 29-ந்தேதி காரைக்கால் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கு சொந்தமான படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இலங்கை அருகே இந்திய எல்லையில் இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் 9 மீனவர்களையும் படகையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் 6 தமிழக மீனவர்கள் உட்பட 9 மீனவர்கள் உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுவை மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 31ஆம் இரவு கோடியக்கரை கடற்பகுதியில் 9 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் 3 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 6 மீனவர்கள் தமிழகப் பகுதியையும் சார்ந்தவர்கள். அவர்களது இயந்திரப் படகோடு, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிடித்துச் செல்லப்பட்ட 9 மீனவர்களையும் விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்

முன்னதாக இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!