10 நாட்கள் கெடு... அதுக்குள்ள இதை செய்யாவிட்டால் கடை நடத்த முடியாது... தொழிலாளர் துறை ஆணையர் எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 18, 2021, 5:17 PM IST
Highlights

புதுச்சேரியில் ஜூன் 16 முதல் 19 வரை தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது. மாநிலம் முழுக்க 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்ன தான் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த  சற்றே முழு ஊரடங்கு உதவினாலும், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே நிலையான தீர்வாக இருக்கும் என மருந்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே மத்திய, மாநில அரசுகள் சார்பில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதுச்சேரியில் ஜூன் 16 முதல் 19 வரை தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது. மாநிலம் முழுக்க 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதுவரை 3.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 

முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும் என உறுதியாக தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அதற்கான தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், புதுச்சேரியில் அனைத்து விதமான கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், உரிமையாளர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால், அவர்களின் கடைகள், நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என எச்சரித்துள்ளார். 
 

click me!