
மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சர் அணில் மாதவ் தவே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை எழுந்த போது மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்ட களத்தில் குதித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை அதிமுக எம்பிக்கள் சந்தித்தனர். மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அணில் மாதவ் தவேவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தமிழர்களின் கலாச்சாரத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என வாக்கு கொடுத்து திறம்பட கையாண்டவர் தவே. அதன்படி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் முடிவு கட்டப்பட்டது.
இந்நிலையில், சுற்றுசூழல் துறை அமைச்சர் அணில் மாதவ் தவே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திறம்பட கையாண்டவர் தவே எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.