
மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார்.60 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் மரணமடைந்தார்.
தவேயின் இந்த திடீர் மரணம் பாஜகவின அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இந்நிலையில் அனில் மாதவ் தவே மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நண்பர் தவேயின் மரண செய்தி கேட்டு தாம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச் சூழலைக் காப்பதில் தனி கவனம் செலுத்தி வந்தவர் தவே என்றும் அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அவரது மரணம் தனிப்பட்ட முறையிலும் தனக்கு மிகப் பெரிய இழப்பு என்று மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த தவவே குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.