
ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே போலீஸ் ஒருவர் கற்பழித்துள்ள கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்காக லக்னோ சென்ற மீரட் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்குக்குப்பின் சண்டிகர் - லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் பயணம் செய்து உள்ளார். அவர் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிய அவரை விசாரித்த டிடிஆர், அப்பெண்ணை ஊனமுற்றோர் பெட்டிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த பெட்டியில் தனியாக இருந்த ரயில்வே போலீஸ் என்பவர் அந்த ரயில் பெட்டியின் கதவுகள் மூடிவிட்டு அப்பெண்ணை கற்பழித்துள்ளார்.
பிஜ்னூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது பயணிகள் சிலர் ஊனமுற்றோர் பெட்டியில் ஏற கதவை திறக்க முடியாமல் திணறினர். பின்னர் கதவை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர்.
அங்கு பெண் ஒருவர் கட்டி வைத்து உடைகள் கிழிக்கப்பட்டு கோரா நிலையில் இருந்ததை கண்ட மக்கள் கொந்தளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்ததில் கற்பழிக்கப்பட்டதை அறிந்துள்ளனர்.
பின்னர், குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்துள்ளனர். இதனையடுத்து, பெண்ணை கற்பழித்த காவலர் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.