தாய், குழந்தையுடன் காரை டோ செய்த டிராபிக் போலீஸ்! வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
தாய், குழந்தையுடன் காரை டோ செய்த டிராபிக் போலீஸ்! வீடியோ வெளியானதால் பரபரப்பு!

சுருக்கம்

Police Suspended

மகாராஷ்டிர மாநிலம், மும்பை, மலாத் பகுதியில் உள்ள எஸ்.வி. சாலையில் கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த காரில் பயணம் செய்த பெண் ஒருவர், தனது குழந்தை அழுததால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சாலையோரம் காரை நிறுத்திவிட்டு குழந்தைக்கு பால் புகட்டியுள்ளார்.

சாலையோரம் கார் நின்றிருந்ததை அடுத்து, அங்கு வந்த போக்குவரத்து துறை கான்ஸ்டபிள் ஷஷாங்க், டோ வண்டியின் மூலம் அந்த காரை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், காரில் இருந்த பெண்ணோ, தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், குழந்தைக்கு பால் புகட்டுவதால், காரை டோ செய்ய வேண்டாம் என்றும் போக்குவரத்து  கான்ஷ்டபிளிடம் அவர் கூறியுள்ளார். ஆனாலும், ஷஷாங்க், அந்த பெண்ணின் பேச்சை கேட்கவில்லை. காரில்
இருந்த பெண்ணோ, தொடர்ந்து கான்ஷ்டபிளிடம் கெஞ்சி கேட்டுள்ளார். அந்த பெண்ணின் பேச்சை கேட்காத போக்குவரத்து கான்ஷ்டபிள், காரை டோ  செய்தார்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரும், ஷஷாங்கிடம் விட்டுவிடும்படி கேட்டுள்ளார். ஆனாலும், ஷஷாங்க், இவர்களுடைய பேச்சை கேட்காமல் காரை டோ செய்வதிலேயே குறியாக இருந்தார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள், வலைதளத்தில் வைரலாக பரவின. இந்த சம்பவம் குறித்து சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை அடுத்து, போக்குவரத்து கான்ஷ்டபிள் ஷஷாங், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், ஷஷாங் மீதான விசாரணை முடிந்த பிறகு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த பெண்ணின் கார் முன்பாக 2 கார்கண் நிறுத்தப்பட்டிருந்தன என்றும், அதனை போலீஸ் காண்ஷ்டபிள் ஷஷாங் கண்டு கொள்ளாமல், தன்னுடைய காரை மட்டும் டோ செய்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!