
தண்டவாளத்தில் ஏற்பட்ட பிளவை உணர்த்த,சாதுர்த்தியமாக ஓடும் ரயிலை நிறுத்திய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
மும்பையில்,CSMD நோக்கி மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது.அப்போது, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு,அரை மீட்டர் அளவிற்கான தண்டவாள இரும்பு தனியாக பிளந்து காணப்பட்டு உள்ளது
அப்போது ரோந்து பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுரேஷ் மீராகுமார், அவ்வழியாக ரயில் வருவதை பார்த்து, உடனடியாக ரயிலை பார்த்த வண்ணம் நிறுத்துங்கள் என சத்தமாக கத்திக்கொண்டும்,கை அசைத்தும் சைகை காட்டி உள்ளார்.
இதனை சுதாரித்து கொண்ட ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தினார்.இருந்தபோதிலும் பிளவு பட்ட இடத்தை தாண்டி ரயில் நகர்ந்து நின்றது.
அதே வேளையில் ரயில் மெதுவாக நகர்ந்ததால்,பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர்,தண்டவாளம் பிளவு பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.மேலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது தண்டவாளம் சீரமைக்கப்பட்டு உள்ளது
தகுந்த நேரத்தில் ரயிலை நிறுத்திய போலிசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.