ரவுடிக்கு செம ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ் - பெங்களூருவில் பரபரப்பு!!

 
Published : Jun 10, 2017, 10:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
ரவுடிக்கு செம ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ் - பெங்களூருவில் பரபரப்பு!!

சுருக்கம்

police shot down rowdy in leg

கர்நாடக மாநிலம் பெங்களூரு  அடுத்த வித்யாராண்யபுரா காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் புனித். வித்யாராண்யபுரா காவல்நிலையத்தில் ஆய்வாளராக பதவியேற்ற நாள் முதல், கொலை கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். 

நகரின் சட்டம் ஒழுங்கை காப்பதில் அதிக சிரத்தை எடுக்கும் புனித், அப்பகுதி ரவுடிகளுக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து வந்தார். 

இதற்கிடையே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நகுல் என்பவரை கைது செய்ய ஆய்வாளர் புனித் சென்றுள்ளார். அப்போது கைதாவதற்கு ஒத்துழைக்காத ரவுடி நகுலன், ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். 

கத்தியைக் கொண்டு நகுலன் தாக்குதல் நடத்த முயற்சித்ததால் அதிர்ச்சியடைந்த புனித், சுயபாதுகாப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் அவரின் கால் பகுதியில் சுட்டு மடக்கிப் பிடித்தார்.

 ரத்த வெள்ளத்தில் சரிந்த நகுலனை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். சினிமா பாணியில் ரவுடி ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!