‘போலீசையே கைது செய்த அதிகாரிகள்’ – பீகாரில் பரபரப்பு

 
Published : Oct 29, 2016, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
‘போலீசையே கைது செய்த அதிகாரிகள்’ – பீகாரில் பரபரப்பு

சுருக்கம்

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் மது அருந்திய போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அங்கு மது விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்த அரசும், கலால்துறையினரும் தீவிர முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முசாபர்பூர் டவுன் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கிளப்பில் கலால்துறை அதிகாரிகள் திடீரென  சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது காவல்
துணை ஆய்வாளர் பகவான் சிங் என்பவர்  அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளார். இதைக்கண்ட அதிகாரிகள் அந்த துணை ஆய்வாளரை அவர் கைது செய்தனர்.

இதையடுத்து பகவான் சிங் மீது மீது மதுவிலக்கு தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்