‘இனி பொண்ணுங்களோட பாதுகாப்புக்கு செல்போன் வச்சிகோங்க போதும்’ - 'அபாய பட்டன்’ அறிமுகம்

First Published Oct 29, 2016, 6:54 AM IST
Highlights


பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க 2017 முதல் செல்போன்களில் அபாய பட்டனை  அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.அகமது, அசுதோஸ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு தலைநகர காவல் துறை ஒன்று உறுதிச் சான்று அளித்தது.

அந்த சான்றில்,  பெண்களின் வேதனையை போக்கும் நோக்கில் வரும் ஜனவரி 1 2017ம் ஆண்டு முதல் செல்போன்களில் 'அபாய பட்டன்’  அறிமுகம் செய்ய உள்ளோம்.

தற்போது உள்ள 100, 101, 102 போன்ற அவசர அழைப்பு எண்களை எடுத்து விட்டு ஒரே அவசர உதவி எண்ணாக 112 அறிமுகம் செய்ய உள்ளதாகவும், ஒரு  ஆண்டுக்குள் தற்போது உள்ள அனைத்து அவசர அழைப்பு எண்களும் இரண்டாம் நிலை எண்களாக மாற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாய எண்ணாக ஒரே எண் வருவதால், இனி பெண்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்த என்னை அழைப்பது என்கிற குழப்பம் வேண்டாம்.

 

click me!