
சீன பொருட்கள் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டால் அது இந்தியாவில் சீனாவின் முதலீட்டை பாதிப்பது மட்டுமின்றி, இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகளை விற்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சீன உற்பத்தி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சீன பொருட்களின் இறக்குமதி மொத்த விற்பனை சந்தையில் 20 சதவீதம் அளவிற்கு சரிவடைந்தது.
இது குறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீனா பொருட்களை இந்தியா புறக்கணித்தால் அது சீனாவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
2015 ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இதன் மதிப்பு 2,276.5 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமேயாகும்.
ஆனால், சீன பொருட்கள் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டால் அது இந்தியாவில் சீனாவின் முதலீட்டை பாதிப்பது மட்டுமின்றி, இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும்.
முறையான மாற்றுப் பொருட்கள் இல்லாமல் சீனப் பொருட்களை புறக்கணித்தால் பாதிப்பானது இந்திய வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் மட்டுமே எங்களுக்கு அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.