
கடப்பா மாவட்டம் துவ்வூறு காவல் நிலைய போலீசார் சென்னை கடத்துவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த ரூ 10 லட்சம் மதிப்புள்ள 7 செம்மரங்களை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் துவ்வூறு காவல் நிலைய போலீசார் இன்று அதிகாலை கிருஷ்ணம்பள்ளி அருகே உள்ள நாராயணசாமி கோயில் அருகே கடத்தலுக்காக தயாராக இருந்த 7 பேரை கைது செய்தனர்.
நல்லமள்ளா, வனப்பகுதியில் உள்ள அறிய வகை செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தனர். போலீசார் எடுத்த நடவடிக்கையும் காரணமாக தமிழகத்தில் இருந்து வரும் கூலி ஆட்களில் வருகை குறைந்துள்ளது.
இந்நிலையில் செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்ட பழைய குற்றவாளி கடப்பா மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த ஸ்ரீராமலு, வினோத், ஜலானிபாஷா, பிரபாகர், நாராயண, சிந்தய்யா மற்றும் மற்றொறு ஸ்ரீ ராமலு ஆகியோர் இணைந்து வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கொண்டு கிருஷ்ணம்பள்ளி அருகே உள்ள நாராயணசாமி கோயில் அருகே பதுக்கி வைத்து வாகனத்தில் கடத்துவதற்காக தயார் நிலையில் இருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசார் மீது செம்மரம் வெட்ட வந்தவர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போலீசார் 7 பேரை கைது செய்து ரூ 10 லட்சம் மதிப்புள்ள 7 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் விசாரனை செய்ததில் கடப்பாவை சேர்ந்த போலய்யா என்பவர் 1 கிலோ செம்மரத்திற்கு ரூ 500 தருவதாக கூறி முன்பணம் வழங்கி அனுப்பி வைத்ததாகவும்.
இந்த செம்மரம் சென்னைக்கு கடத்தி செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் பின்னனியில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.