
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள இணைய தளத்தை மர்மநபர்கள் முடக்கி வைத்துள்ளனர். இதனால், சட்டம் ஒழுங்கு, குற்றச்சம்பவங்கள், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட சம்பவங்களை கண்டு, தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி, ஏர்பேடு, கலிகிரி உள்பட சில இடங்களில் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இணையதள வசதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியில் நடக்கும் எந்தவொரு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவோ, போலீசாரை தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காவல் நிலையங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப சானதனங்கள் தற்போது செயல்படாமல் உள்ளது.
இதையொட்டி, தகவல் தொழில்நுட்ப சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்ட சம்பவம், காவல்துறை உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது தீவிரவாதிகளின் சதி திட்டமா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.