உத்தர பிரதேசத்தில் ஓடி ஒளியும் ரவுடிகள்… குற்றவாளிகளை கண்காணிக்க நேரடியாக களமிறங்கிய யோகி ஆதித்யநாத்…

 
Published : May 13, 2017, 10:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
உத்தர பிரதேசத்தில் ஓடி ஒளியும் ரவுடிகள்… குற்றவாளிகளை கண்காணிக்க நேரடியாக களமிறங்கிய யோகி ஆதித்யநாத்…

சுருக்கம்

Yogi adityanath the head of police squad

உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச  மாநில எரிசக்தித் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளக்ளிடம் பேசும்போது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, உத்தரப் பிரதேசத்தில் சாதாரண குடிமகனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது என்றும்
கடந்த 50 நாள்களில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் ஆதித்ய நாத்தின்  அலுவலகத்தில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட உள்ளது என்றும்,
யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் இந்தப் பிரிவை மேற்பார்வையிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

.மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளையும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களையும் தங்களுடைய கார்களில் அழைத்துச் சென்ற சமாஜவாதி கட்சித் தலைவர்கள் இதுகுறித்து சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று அவர் பதிலடி கொடுத்தார்.

.பாஜக எம்எல்ஏ, கோரக்பூரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருடன் மோதலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் உண்மையில், அந்த அதிகாரி கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ அவ்வாறு நடந்த கொண்டதாக தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!