இந்த கவிதை தொகுப்புக்காகத்தான் கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது...! எழுத்தாளர் யூமா வாசுகிக்கும்...!

Asianet News Tamil  
Published : Dec 21, 2017, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
இந்த கவிதை தொகுப்புக்காகத்தான் கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது...! எழுத்தாளர் யூமா வாசுகிக்கும்...!

சுருக்கம்

Poetas Inqualab and Yuma Vasuki have been awarded the Sahitya Academy Award.

கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகி ஆகியோருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் இன்குலாப். இவரின்  இயற்பெயர் செ.கா.சீ.சாகுல் அமீது. 

ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை  பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட கவிதைகளை எழுதினார். 

தொடக்கத்தில் திராவிட இயக்க சிந்தனை வழியில் பயணித்த இவர், கீழவெண்மணி படுகொலைக்குப் பிறகு மார்க்சியத்தை தனது கண்களாகக் கொண்டு ஈர்க்கப்பட்டார். 

பின்னர் இன்குலாப் 2016-ல் காலமானார். 12 கவிதைகள் தொகுப்புகள், 1 சிறுகதை நூல், 2 கட்டுரைகள் தொகுதிகளை இன்குலாப் எழுதியுள்ளார். 

ஔவை, மணிமேகலை உட்பட ஆறு நாடகங்களும் இன்குலாப் எழுதியுள்ளார். 2017 ல் இவரது அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கிய ’ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்ற தொகுதி வெளியானது. 

 இந்திய அளவில் இலக்கியதற்காக சிறந்த கவுரவமாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருது மற்றும் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காந்தள் நாட்கள் என்ற கவிதை தொகுப்புக்காக கவிஞர் இன்குலாப்-க்கு விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு, கதாக்கின் இதிகாசம் எனும் மலையாள நூல் மொழி பெயர்த்துள்ளார். 3 கவிதைத் தொகுதிகள், ஒரு சிறுகதை நூல், 2 நாவல்கள் யூமா வாசுகி படைத்துள்ளார். இதனால் அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பலூச்கள் இந்தியாவுக்கு எழுதிய கடிதம்... கோயில் போன்ற உறவு..! குலை நடுங்கும் பாகிஸ்தான்..!
Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!